பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை மற்றும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; ரவூப் ஹக்கீம்

21 Jan, 2025 | 05:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விமான நிலைய அதிகாரிகள் அதற்கான நீதிமன்ற வழக்கினை குறிப்பிடவில்லை. 

சிறிதரனின் சிறப்புரிமை மீறப்பட்டு, அவருக்கு பாரியதொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (21)  நடைபெற்ற அமர்வின் போ விமான நிலையத்தின் தான் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அச்சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இருந்ததாகவும், அவர் விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழக முதலமைச்சரின் அழைப்புக்கமைய  அயலகத் தமிழர் நிகழ்வில் நானும் கலந்துக் கொண்டேன். விமான நிலையத்தில் பிரபுக்கள் முனையத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நானும் அவ்விடத்தில் இருந்தேன்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனை தடுத்து வைத்து அவருக்கு எதிராக   பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். 

பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தால் அதற்கான வழக்கினை குறிப்பிட வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு எதனையும் குறிப்பிடவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அச்சட்டம் நீக்கப்படவில்லை. 

இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்படுவது தவறானது.  விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர்  சமரசத்துக்கு வந்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை மற்றும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அவருக்கு பாரியதொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே முறையான விசாரணைகளை மேற்கொண்டு  நியாயத்தை வழங்குங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - சைக்கிள் மோதி விபத்து...

2025-02-08 13:01:21
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து...

2025-02-08 12:58:29
news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22