குத்தகைக்கு வழங்கப்படும் மாளிகாவத்தை வீட்டுத்தொகுதிக்கு சொந்தமான வாகன தரப்பிடங்கள் ; அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

22 Jan, 2025 | 09:10 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மாளிகாவத்தை வீட்டுத்தொகுதிக்கு சொந்தமான வாகன தரப்பிடம் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இடத்தில் களஞ்சியசாலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. 

அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு நகரில் பல வீட்டு தாெகுதிகள் இருக்கின்றன. சில வீட்டுத்தொகுதிகளில் வாகன தரப்பிடங்களும் அமைக்கப்பபடுகின்றன. 

அந்த வீடுகளில் இருப்பவர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கே அது அமைக்கப்படுகிறது. மாளிகாவத்தை வீட்டு தொகுதியில் 3 வாகன தரப்பிடங்கள் இருக்கின்றன. 

2020, 24 காலப்பகுதியில் அப்போது இருந்த அமைச்சர் அல்லது அதிகாரி, மாளிகாவத்தை ரம்யா வீதியில் பாரிய வாகன தரப்பிடம் ஒன்று இருக்கிறது.

இந்த வாகன தரப்பிடம் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வரி அறவிட்டுக்கொண்டு பாரிய களஞ்சியசாலை ஒன்றை அந்த இடத்தில் அமைத்துவருகிறார்.

இது தவறான நடவடிக்கை. 2020, 24 காலப்பகுதியிலே தனியார் ஒருவருக்கு இந்த இடம் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது.

 அதேபோன்று அந்த வீட்டுத் தாெகுதிக்கு அருகில் விளையாட்டு மைதானம் ஒன்று இருக்கிறது. அதுவும் அந்த வீட்டு தாெகுதியில் இருக்கும் சிறுவர்கள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்டதாகும். அதனையும் குத்தகைக்கு வழங்கப்போவதாக தெரிய வருகிறது. 

அதனால் குறித்த வாகன தரப்பிடம் மற்றும் சிறுவர்களின் விளையாட்டு மைதானத்தை பாதுகாத்து குறித்த வீட்டுத்தொகுதி மக்களின் பாவனைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு  நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் அருன கருணாதிக்க பதிலளிக்கையில், பொது மக்களின் தேவைக்கு ஒதுக்கப்பட்ட இடமொன்றை வேறு விடயங்களுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42