இந்தியாவில் மின்சாரத் துண்டிப்பின் போது ஏற்பட்ட இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் பெண்ணொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார்.

நித்திரை கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்துவிட்டார். குறித்த நபரும் உள்ளே சென்று அந்த பெண்ணின் அருகே படுத்துவிட்டார். 

குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்ட அந்த நபர் அப்பெண்ணுடன் உடலுறவில் ஈடுப்பட்டுள்ளார்.மறுநாள் அதிகாலையில் எழுந்து, அந்த நபர் கிளம்பும் போது, வெளிச்சத்தில் அந்த பெண் அவரை பார்த்தபோது தான் அது தன்னுடைய கணவன் இல்லை, அது பக்கத்து வீட்டுக்காரர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பற்றி அப்பெண்ணின் கணவருக்கு தெரியவர, இந்த விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்று விட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின் சம்பவத்துடன் தொடர்புடைய அயல் வீட்டை சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.