03 கோடியே 64 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான "ஹசீஸ்'' மற்றும் "குஷ்'' போதைப்பொருட்களுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பிரித்தானிய பிரஜை தாய்லாந்தின் பாங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் முற்பகல் 11.06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 01 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 908 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM