பிறக்கும் போதே எம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையை பொருத்து ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான யோகங்கள் அமைய பெற்றிருக்கும். அந்த யோகங்களை இந்த பிறவியில் பெறுவதற்கு நவ கிரகங்களின் அருள் வேண்டும். அதற்கு நாம் பிறந்த பிறகு எந்த பாவ செயலையும் தெரிந்தும் தெரியாமலும் செய்யாதிருக்கவேண்டும். அப்படி இருந்தால் இந்தப் பிறவியில் எம்முடைய ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களையும் அனுபவிக்கலாம்.
அதிலும் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவதற்கும், சுகவீனம் ஏற்படாமல் உடல் திடகாத்திரமாக இருப்பதற்கும், லட்சியத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி கிடைப்பதற்கும், எந்த ஒரு தருணத்திலும் யாருக்கும் எதற்கும் அஞ்சாது இருப்பதற்கும், துணிவுடன் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதற்கும், நீண்ட ஆயுளை பெறுவதற்கும் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களாக இருந்தால் அதாவது மேற்கொண்ட விடயங்களில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அதில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால் உங்களுடைய ஜாதகத்தில் கூர்ம யோகம் இருக்க வேண்டும்.
கூர்ம யோகம்..? என்றால், உங்களுடைய லக்னத்தில் இருந்து அதாவது நீங்கள் பிறந்த லக்னத்தில் இருந்து உங்களுடைய ஜாதகத்தில் உள்ள ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீடு, ஆறாம் வீடு, ஏழாம் வீடு, ஆகிய மூன்று வீடுகளிலும் தொடர்ச்சியாக ராகு, கேது ஆகிய இரண்டு சாயா கிரகங்களை தவிர்த்து ,மீதமுள்ள ஏழு கிரகங்கள் உச்சமோ ஆட்சியோ பெற்று திகழ்ந்தால் உங்களுக்கு கூர்ம யோகம் உண்டு.
உதாரணத்துடன் விவரிக்க வேண்டும் என்றால் நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீடு ,துலாம், இங்கு சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் உச்சமடைவார்கள். ஆறாம் வீடு, விருச்சிகம், இங்கு செவ்வாய் பகவான் ஆட்சி+ பலம் பெறுவார். ஏழாம் வீடான தனுசுவில் குரு உச்சம் பெறுவார். தனுசு வீட்டில் சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் அதி நட்பான கிரகம் என்ற நிலையை பெறுவார்கள்.
இந்நிலையில் மிதுன லக்ன ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சனி அல்லது சுக்கிரன் , ஆறாம் வீட்டில் செவ்வாய் , ஏழாம் ஆம் வீட்டில் குரு , ஆகிய கிரகங்கள் இருந்தால் நீங்கள் இந்தப் பிறவியில் கூர்ம யோகத்தை பெற்றவர்களாக திகழ்வீர்கள். இதனால் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி திட்டமிட்டு, சமயோசிதமாக உழைத்து வெற்றியை பெறுவீர். நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்.
இத்தகைய யோகத்தை பெறாதவர்கள் இறை சிந்தனையுடன் இறைத் தொண்டு செய்து சக மனிதரிடத்தில் பேரன்பு காட்டினால் உங்களுடைய இலக்கை அடைவீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM