புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

21 Jan, 2025 | 03:48 PM
image

டிஜிட்டல் திரை பிரபலமான ஹரி பாஸ்கர் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகும் ' மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர் பி. வாசு சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.

அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' எனும் திரைப்படத்தில் ஹரிபாஸ்கர் , லொஸ்லியா , இளவரசு,  ஷா ரா , ரெயான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

குலோதுங்கவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார். இளமை ததும்பும் இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் இன்வேட் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி ராமசாமி மற்றும் நித்தின் மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் இளமையாகவும் , இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை எதிரொலிக்கும் காட்சிகளும் ரசனையாக இடம் பிடித்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பி. வாசு பேசுகையில், '' படத்தின் இயக்குநர் அருண் ராஜேந்திரன் எம்முடைய உதவியாளர். இப்படத்தின் கதையை எம்மிடம் விவரிக்கவில்லை. இருந்தாலும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசிப்பேன். அதன் பிறகு எம்முடைய குருநாதர் ஸ்ரீதர் எப்படி எமக்கு வாழ்த்து தெரிவித்தாரோ அதேபோல் இவர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பேன் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right