வாய் வறட்சி எனும் உலர் வாய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

21 Jan, 2025 | 03:19 PM
image

எம்மில் சிலர் பேசும்போது அவர்களுடைய வாயிலிருந்து விரும்பத்தகாத துர்நாற்றம் வீசக்கூடும். மேலும் இவர்கள் பேசுவதற்கும், திரவ உணவை அருந்துவதற்கும் சிரமப்படுவார்கள்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வாய் வறட்சி எனும் உலர் வாய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், இதனை ஆங்கிலத்தில் டிரை மவுத் என்றும் மருத்துவ ரீதியாக குறிப்பிடுவார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு உமிழ்நீர் போதுமான அளவிற்கு சுரக்கவில்லை என்றாலும், உதடுகள் இரண்டும் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ஒட்டிக் கொண்டிருந்தாலும் அல்லது பேசும்போது துர்நாற்றம் வீசினாலும், திட மற்றும் திரவ உணவை விழுங்கும் போது அதில் சிரமம் ஏற்பட்டாலும், தொண்டை கரகரப்பு ஏற்பட்டாலும், நாக்கின் மேற்பகுதியில் மாற்றம் ஏற்பட்டாலும், பல் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டாலும் உங்களுக்கு வாய் வறட்சி அதாவது உலர் வாய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.

வாயில் எப்போதும் உமிழ்நீர் சுரந்து கொண்டு இருக்க வேண்டும். இவைதான் வாயை போதுமான அளவிற்கு ஈரப்பதத்துடன் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. விவரிக்க இயலாத  காரணத்தினால் உமிழ்நீர் சுரப்பிகள் சம சீரற்ற நிலையில் இயங்கினாலோ அல்லது உமிழ்நீர் சுரக்கும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலோ உங்களுடைய வாய் பகுதியில் வறட்சி பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை தமிழில் உலர் வாய் பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பாதிப்பு பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் சிலருக்கு பற்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். இதனால் வாய் வறட்சி எனப்படும் உலர் வாய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். இதை தவிர்த்தால் வாய்ப்புண், பல் மற்றும் ஈறு பிரச்சனை, வாய் புற்றுநோய், விழுங்குவதில் நாட்பட்ட பாதிப்பு ஆகிய பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

முதுமை, நரம்பு பாதிப்பு , குறட்டை மற்றும் வாயால் சுவாசித்தல்,  புகையிலை மற்றும் மதுவை பாவித்தல், புற்றுநோய்க்கான சிகிச்சை ஆகிய பல காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மேற்கூறிய அறிகுறியுடன் உள்ள நோயாளிகளுக்கு வைத்தியர்கள் உமிழ்நீர் பரிசோதனை, குருதி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இதனைத் தொடர்ந்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவர்.

வைத்தியர் விஜயலட்சுமி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14