"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள் பௌத்த ஆலயமாக பார்க்க கூடாது சட்டவிரோத கட்டிடமாகவே பார்க்கவேண்டும்- அவர்கள் எங்கள் கரிசனைகளை புரிந்துகொள்ளவேண்டும் " தையிட்டியிலிருந்து ஒரு குரல்

Published By: Rajeeban

21 Jan, 2025 | 08:27 PM
image

People’s Alliance for Right to Land - PARL

தையிட்டியில் உள்ள மக்கள் தங்கள் பூர்வீக நிலத்திற்காக தொடர்ந்தும் போராடிவருகின்றனர்,அவர்களில் சுகுமாரியும் ஒருவர் .

பார்ல் அமைப்பு கடந்த டிசம்பரில் அவரை சந்தித்த போது அவர் ஒரேயொரு வேண்டுகோளை மாத்திரம் விடுத்தார் அதாவது தனது கதையை தென்பகுதி மக்களிற்கு தெரிவிக்கவேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.

அதன் மூலம் தனது போராட்டத்தை தென்பகுதி மக்கள் முழுமையாக புரிந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

நான் சுகுமாரி சாருஜன்;  தையிட்டி   யாழ்ப்பாணம்.

எங்கள் பகுதியில் அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் இராணுவ அதிகாரிகளும் பெரும் அநீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.பெரும் குழப்பம் நிலவுகின்றது.

1925 முதல் தமிழர்கள் தங்களின் தாயகமாக கருதி வந்த நிலத்தை இராணுவமோதல்களின் போது 1990களில் இராணுவம் கைப்பற்றியது .அதனை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றியது.

2015 இல் இடம்பெற்ற மீள்குடியேற்றத்தினை மீள்குடியேற்றம் என தெரிவிக்க முடியாது.எங்கள் நிலத்தின் ஒரு பகுதியை அவர்கள் மீள கையளித்த போதிலும் சுமார் பத்து ஏக்கர் நிலத்தினை அவர்கள் கையளிக்கவில்லை.அதனை இராணுவம் தன்வசப்படுத்தியது.

இந்த நிலத்தில் அன்பு இரக்கம் கருணை சமத்துவம் போன்றவற்றை போதிக்கும் புத்தரின் பெயரினால் பெரும் பௌத்த ஆலயத்தை நிறுவியுள்ளதுடன் மதவழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

பலதரப்பினருக்கும் அழுத்தங்களை கொடுத்துள்ள போதிலும் நீதிக்காக பரப்புரை செய்துள்ள போதிலும் நீதியென்பது கிட்டாத விடயமாக காணப்படுகின்றது.

சிங்கள மக்களின் எதிர்ப்பே எங்கள் நிலத்தை மீள வழங்குவதற்கு தடையாக உள்ளது என அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலத்தினை விடுவித்தால் தென்பகுதியில் அமைதியின்மை உருவாகும் என தெரிவிக்கின்றனர்.

எங்களால் இதன் பின்னால் உள்ள காரணத்தை விளங்கிக்கொள்ளமுடியவில்லை? எங்கள் நிலத்தை மீள வழங்குவது குறித்து  ஏன் சிங்களவர்கள் கரிசனை கொள்ளவேண்டும்?போதிய புரிந்துணர்வின்மை காரணமாகவே இவ்வாறான கருத்துக்கள் வெளியாகின்றன.

அவர்கள் தென்பகுதியில் இந்து ஆலயங்கள் உள்ளன என தெரிவிக்கின்றனர்.ஆனால் இந்து ஆலயங்களைபலவந்தமாக தனியார் நிலங்களில் நிர்மாணிக்கவில்லை.ஆலயங்களிற்கு சொந்தமான நிலத்திலேயே அவற்றை நிர்மானித்துள்ளனர்.

வடக்கில் . விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நடைபெற்றபோதிலும் நயினாதீவு நாகவிகாரை எந்த சேதமும் இன்றி பாதுகாக்கப்பட்டது.யாழப்பாணம் நாகவிகாரைக்கு பௌத்தர்கள் செல்வதற்கு நாங்கள் எந்த குழப்பத்தையும் விளைவிப்பதில்லை.நாங்களும் இந்த ஆலயங்களிற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றோம்.

ஆனால் தையிட்டியில் உள்ள பௌத்த ஆலயம் சட்டவிரோதமாக எந்த முன் அனுமதியும் இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மக்களை ஏமாற்றும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பார்ள் அமைப்பின் ஊடாக நாங்கள் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களிற்கு விடுக்கும் வேண்டுகோள் இது.

எங்களை எவரும் கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை.எங்கள் கோரிக்கைகளை உறுதி செய்யக்கூடிய உறுதிகள் உட்பட அiனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன.

இதுதவிர பிரதேச செயலாளர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய கடிதம் எங்களிடமுள்ளது.இந்த நிர்மாணம் சட்டவிரோதமானது என உறுதி செய்து பிரதேச செயலாளர் தயாரித்த அறிக்கையும் எங்களிடம் உள்ளது.

இந்த அறிக்கைகளை தென்பகுதி மக்களிடம் கொண்டு சென்று அவர்களிற்கு தெளிவுபடுத்துமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

தென்பகுதி சிங்கள மக்கள் இதனை பௌத்த ஆலயமாக பார்க்க கூடாது சட்டவிரோத கட்டிடமாகவே பார்க்கவேண்டும் என்பதே எங்கள் வேண்டும் அதனை இடிக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை.

தமிழில் ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right