கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து உடுதெனிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் மயிலப்பிட்டியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பாடசாலை பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்புறத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 18 வயது யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் அவ்வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM