காசாவில் யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் நீடிக்கின்ற நிலையில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களால் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருப்பார்கள் என கருதப்படும் ஆயிரக்கணக்கானவர்களை தேடும் நடவடிக்கைகளில் காசா மக்கள் ஈடுபடுகின்றனர் என பாலஸ்தீனிய அவசர சேவை தெரிவித்துள்ளது.
15 மாதங்களாக காசாவை முற்றாக அழித்த மத்திய கிழக்கில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்திய யுத்தத்தை நிறுத்தம் பணயக்கைதிகள் பாலஸ்தீன கைதிகள் விடுதலையுடன்
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் காசாவை முற்றாக நிர்மூலமாக்கியுள்ளது.
இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள பத்தாயிரம் தியாகிகளின் உடல்களை தேடுகின்றோம் என பாலஸ்தீன சிவில் அவரசசேவை பிரிவின் பேச்சாளர் மஹ்மூட் பசல் தெரிவித்துள்ளார்.
குறைந்தது 2840 உடல்களாவது முற்றாக சிதைந்துவிட்டன அவற்றிற்கான அடையாம் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள முகமட் கோமா தனது சகோதரரையும் உறவினர் ஒருவரையும் போரில் இழந்தவர்.
'இது பெரும் அதிர்ச்சி, தங்களின் வீடுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ள மக்களின் அளவை குறிப்பிட முடியாது - எண்ணிலடங்காத மக்கள் அதிர்ச்சியில் சிக்குண்டுள்ளனர்,இது அழிவு , முழுமையான அழிவு,இது பூகம்பத்தினால் ஏற்படும் அழிவோ அல்லது வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவோ இல்லை, இங்கு நடந்தது அழிப்பதற்கான போர் "என அவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் பெருமளவிற்கு யுத்த நிறுத்தம் நீடிப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்களும் பொதுமக்களும் ரபாவில் இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகத்தினால் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM