திருமணத்தின் போது மரணம் வரை இணை பிரியாது இருப்பதாக மணமகனும் மணமகளும் உறுதியளிப்பது வழமையாகும்.ஆனால் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மாரடைப்பால் திடீர் மரணத்தைத் தழுவிய தனது காத லரை அவரது மரணச்சடங்கின் போது திருமணம் செய்து தனது காதல் மரணத்தையும் தாண்டியது என் பதை நிரூபித்துள்ளார்.

சசோயங்சவோ மாகாணத்தைச் சேர்ந்த நான் திபாரத் என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரான பியத்தை அவரது மரணச்சடங்கின் போது திருமணம் செய்துள்ளார்.

திபாரத்தும் பியத்தும் திருமணம் செய்வதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் பியத் திடீரென மார டைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார். மார டைப்பு தொடர்பான எந்தவொரு நோயறிகுறியும் இல்லாமல் அவர் எதிர்பாராத வகையில் மரண மடைந்ததால் திபாரத் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இந்நிலையில் தனது மனம் கவர்ந்த காதலரை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க முடிவெடுத்த திபாரத், அவரை மரணச் சடங்கின் போது திருமணம் செய்யத் தீர்மானித்தார்.

தொடர்ந்து பனொம் சராகம் எனும் இடத்தில் இடம்பெற்ற பியத்தின் மரணச்சடங்கின் போது திபாரத் அவரை திருமணம் செய்தார்.

இதன்போது பியத்தின் சடலத்திற்கு மணமகனுக் குரிய ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது அதேசமயம் திபாரத்தும் முழுமையான திருமண ஆடை அணிந்து இந்த வைபவத்தில் பங்கேற்றார்.

இந்த திருமணம் குறித்து திபாரத் விபரிக்கையில், ''எனக்கு எனது திருமணம் தொடர்பில் பெரிய கனவு இருந்தது. இந்த திருமணத்தின் போது நாங்கள் இருவரும் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியிருப்பதாக உணர்ந்தேன். நான் அவரை இதயபூர்வமாக நேசித்தேன். அவர் என்னிடமிருந்து பிரிந்து சென்ற போது அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாதிருந்தது. அவர் எமது திருமணம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற எனது கனவு தற்போது நனவாகிவிட்டது. இதுவே நான் எனது வழிமுறையில் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும். அவர் இனி அமைதியாக ஓய்வெடுப்பார் என நம்புகிறேன். நாம் இருவரும் என்றோ ஒருநாள் மேலுலகில் ஒருவருக்கருகில் ஒருவர் இருப்போம் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார்.