பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகளும் இரண்டு அடிக்கு மேல் திறப்பு: நெளுக்குளம் - நேரியகுளம் வீதி போக்குவரத்து தடை

Published By: Vishnu

20 Jan, 2025 | 10:16 PM
image

வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கதவுகளும் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் - நேரியகுளம் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் ஒரு வான் கதவுகள் இரண்டரை அடியும், மூன்று வான்கதவுகள் இரண்டு அடியும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் குளத்து நீர் நெளுக்குளம் - நேரியகுளம் வீதியை மேவி பாய்ந்து வருவதால் அவ் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 12:47:46
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57
news-image

நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்...

2025-02-16 12:26:15
news-image

நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு...

2025-02-16 11:43:58
news-image

பொத்துப்பிட்டிய பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2025-02-16 12:25:19
news-image

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை...

2025-02-16 11:27:20