இன்றைய திகதியில் பிரதோஷ வழிபாடு என்பது பொது மக்களிடத்தில் பிரபலமாகி வருகிறது. அதாவது பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த காலகட்டத்தில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை ஏராளமான பக்தர்கள் வாங்கித் தருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் புண்ணிய கணக்கை அதிகரித்துக் கொள்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் அபிஷேகத்தின் மூலம் பிரதோஷ நாளன்று மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாளும் சிவபெருமானுக்கு உங்களுடைய ஜாதகத்தில் நவகிரகங்களில் எந்த கிரகங்கள் வலிமை குன்றி இருக்கிறார்களோ அவர்களுக்கான பிரத்யேக அபிஷேகத்தின் மூலமாகவே வலுவேற்றி, அவர்களின் அருளை பெற இயலும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது அபிஷேகத்தின் மூலமாகவே நீங்கள் உங்களுக்கான பலனை பெற இயலும். இது தொடர்பான விவரங்களை தொடர்ந்து காண்போம்.
நவ கிரகங்களும், அதற்குரிய அபிஷேக பொருட்களும்
சூரியன் - தேன்
சந்திரன்- தூய்மையான நீர்
செவ்வாய் - பசும் பால்
புதன் - கரும்புச்சாறு
குரு - பசு நெய்
சுக்கிரன் - தயிர்
சனி - இளநீர்
ராகு - சந்தனம்
கேது - வில்வ நீர்
உதாரணத்திற்கு உங்களுடைய ஜாதகத்தில் சூரிய பகவான் வலுவிழந்து இருந்தால் அதாவது தந்தையுடன் சுமூகமான உறவு இல்லாதது - அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்காதது - தலைமுடி உதிர்வு - வலது கண் பாதிப்பு - பித்தப்பை பாதிப்பு - போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், இவர்களுக்கு சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்க வில்லை என புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களுடைய ஜாதகத்தில் சூரிய பகவான் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறாரோ அந்த நட்சத்திரத்திலிருந்து 27ஆவது நட்சத்திரத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நட்சத்திர நாளன்று தவறாமல் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து வரும்போது சூரிய பகவானின் அருள் படிப்படியாக கிடைப்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.
ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு சாயா கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதனை வலிமையாக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்களுடைய ஜாதகத்தில் ராகு பகவான் மற்றும் கேது பகவான் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்களோ அதிலிருந்து இடமிருந்து வலமாக வரும் நட்சத்திரத்தை தெரிவு செய்ய வேண்டும்.
அவர்கள் ஜாதகத்தில் வலமிருந்து இடமாக இல்லாமல் இடமிருந்து வலமாக சுற்றி வருவதால் அவர்களுடைய நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் தான் 27 வது நட்சத்திரமாக வரும். அதனால் அந்த நட்சத்திரத்தை கவனமாக தெரிவு செய்து , அந்த நட்சத்திர நாளன்று ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்குரிய அபிஷேக பொருளை வாங்கி அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு ராகு பகவான் மற்றும் கேது பகவானின் வலிமை அதிகரித்து, அவர்களின் பரிபூரண அருள் கிடைக்கும்.
உதாரணத்திற்கு உங்களுடைய ஜாதகத்தில் ராகு பகவான் சதயம் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் ராகு பகவான் இடமிருந்து வலமாக சுற்றி வருவதால் பூரட்டாதி நட்சத்திரம் தான் 27 வது நட்சத்திரமாக வரும். அந்த நட்சத்திரம் வரும் நாளில் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு ராகு பகவானுக்குரிய சந்தனத்தால் அபிஷேகம் செய்து வரும்போது உங்களுக்கு ராகுவின் அருள் பரிபூரணமாக கிட்டும்.
அதே தருணத்தில் நீங்கள் குருபகவான் புதன் பகவான் ஆகியோர் உங்களது ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் அவர்கள் உங்களுடைய ஜாதகத்தில் வக்ர கதியில் இருந்தால் அவர்களும் இடமிருந்து வலமாக பயணிப்பதால், அவர் நின்ற நட்சத்திரத்திற்கு இடது புறத்தில் இருக்கும் இரண்டாவது நட்சத்திரத்தை தெரிவு செய்து, அந்த நட்சத்திர நாளன்று குரு பகவான் மற்றும் புதன் பகவானுக்குரிய அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வரும்போது உங்களுக்கு குரு பகவான் மற்றும் புதன் பகவானின் பரிபூரண அருளும், ஆசியும் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM