மூத்த பத்திரிகையாளரும், தமது சங்கத்தின் உறுப்பினருமான விக்டர் ஐவனின் மறைவு தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
பிரபல பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அவரது 75 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (19) காலமானார். அவரது மறைவு தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அனுதாபச்செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னரங்க செயற்பாட்டாளர்களில் ஒருவராவார்.
ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து "ஊடக சட்ட மறுசீரமைப்பை" வலியுறுத்தி பிரசாரத்தை ஆரம்பித்த வேளையில் "ராவய" பத்திரிகையின் ஆசிரியர் என்ற ரீதியில் விக்டர் ஐவன் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் இணைந்துகொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தினால் விக்டர் ஐவனுக்கு எதிராக சில வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும் விக்டர் ஐவன் அவ்வழக்குகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டுசென்றார். அதுகுறித்து ஆராய்ந்த குழு, இவ்வாறான தொடர் வழக்குகள் மூலம் விக்டர் ஐவனின் மனித உரிமைகளை மீறியமைக்காக இலங்கை அரசாங்கம் அவருக்கு நட்ட ஈடு செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது.
அதோபோன்று ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப்பொறுப்பு தொடர்பான கொழும்பு பிரகடனம் கைச்சாத்திடப்படுவதற்கு வழிகோலிய சர்வதேச மாநாட்டை 1998 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்துவதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்தவர்களில் விக்டர் ஐவன் மிகமுக்கியமானவராவார்.
பின்னாளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலம் தொடர்பில் "Choura Rajini" எனும் தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்ட விக்டர் ஐவன், சமூக - அரசியல் செயற்பாடுகளில் மிகுந்த முனைப்புடன் பங்கெடுத்துக்கொண்டார்.
அதுமாத்திரமன்றி பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அயராது பாடுபட்ட அவருக்கு இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் "சேபால குணசேன விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM