குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல் ராதா' ( போத்தல் ராதா) படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 7

20 Jan, 2025 | 05:43 PM
image

தமிழ் சினிமாவில் நடிப்புத் திறன் மிக்க நட்சத்திர நடிகரான குரு சோமசுந்தரம் மது அருந்துதலுக்கு அடிமையான நோயாளியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' பாட்டல் ராதா ' ( போத்தல் ராதா ) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பாட்டல் ராதா' ( போத்தல் ராதா ) எனும் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் ,அந்தோணி, பாரி இளவழகன், ஆறுமுகப் பெருமாள், அபி ராமையா, ஜே பி குமார் , கே. எஸ் .கருணா பிரசாத்,  மாலதி அசோக் நவீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

மது பழக்கத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புடன் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பா. ரஞ்சித் மற்றும் மற்றும் டி. என். அருண் பாலாஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர்கள் என். லிங்குசாமி - அமீர்-  வெற்றி மாறன் - ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் முன்னணி நட்சத்திர இயக்குநருமான பா ரஞ்சித் பேசுகையில், '' இப்படத்தின் கதையை இயக்குநர் தினகரன் எம்மிடம் விவரித்த போது எம்முடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் பிரதிபலித்ததால்.. நெருக்கமானதாக உணர்ந்தேன்.

மேலும் இந்த சமூகத்தில் இந்த தருணத்தில் அவசியம் சொல்ல வேண்டிய கதை என்றும் உணர்ந்தேன். இந்தத் திரைப்படம் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right