இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

Published By: Digital Desk 7

20 Jan, 2025 | 05:12 PM
image

1995 ஆம் ஆண்டில் வெளியான ' தொட்டா சிணுங்கி' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகை தேவயானி, 'கைக்குட்டை ராணி'  எனும் குறும்படத்தை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த குறும்படத்திற்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடிகையாக அறிமுகமாகி 55 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் தேவயானி முதன்முறையாக 'கைக்குட்டை ராணி' எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

டி பிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தேவயானி எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்த குறும்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். நிஹாரிகா வி .கே. மற்றும் நவீன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இருபது நிமிடங்கள் கால அவகாசம் கொண்ட இந்த குறும்படத்தில் குழந்தைகளின் உணர்வுகள் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது.

இந்தக் குறும்படம் ஜெய்ப்பூரில் நடைபெறும் 17 வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குறும்பட பிரிவில் திரையிடப்பட்டது. அதில் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படம் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக தேவயானி பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்படங்களிலும் , சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தாலும் எம்முடைய இயக்கத்தில் முதன்முறையாக உருவான குறும் படத்திற்காக விருதினை பெறும்போது விவரிக்க முடியாத சந்தோஷம் மனதில் ஏற்படுகிறது.

இந்த தருணத்தில் இதன் உருவாக்கத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது போன்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right