அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

20 Jan, 2025 | 04:26 PM
image

ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ' பத்திக்கிச்சி ..' எனும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி ' எனும் திரைப்படத்தில் அஜித் குமார் , திரிஷா,  அர்ஜுன்,  ரெஜினா  கசண்ட்ரா, ஆரவ், நிகில் நாயர் , தாசரதி , கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் பெர்வரி மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' பத்திக்கிச்சி ஒரு ராட்சச திரி..'  எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் மற்றும் அமோக் பாலாஜி ஆகியோர் இணைந்து எழுதி இருக்க, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான அனிருத் மற்றும் யோகி சேகர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

மேலைத்தேய இசை தாள லயத்தில் உருவான இந்தப் பாடலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கில றாப் வரிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தப் பாடலில் இடம்பெறும் 'நம்பிக்கை விடாமுயற்சி ' எனும் வரிகளும் அஜித் குமாரின் ரசிகர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த பாடலுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right