(செ.சுபதர்ஷனி)
இலங்கை ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஊடக நிறுவனமொன்றை நிறுவுவதற்கு தேவையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடகத்துறை அமைச்சில் இலங்கை ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் தெரிவிக்கையில்,
இலங்கை ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஊடக நிறுவனமொன்றை நிறுவுவதற்கு தேவையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு நிறுவனத்தை நிறுவுவதற்கு முந்தைய அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் இதுவரையில் அது சாத்தியப்படவில்லை என இக்கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
ஆகையால் எதிர்வரும் காலங்களில் இந்நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை ஊடகவியலாளர்களாக இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்துவது எமது நோக்கமாகும்.
இதனுடாக, ஊடகத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தொழிலுக்கு மதிப்பளிப்பதுடன், சிறந்த ஊடகவியலாளர்களை நாட்டிற்கு வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதேவேளை ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அத்துடன் கௌரவம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 50 வருட பழமையான 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைச் சபைச் சட்டத்தை புதிய தகவல் தொடர்பு போக்குகளுக்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களுக்கான நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் முன்முயற்சியின் கீழ் ஊடகவியலாளர்களின் கல்வி நலன் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஊடகவியலாளர்களுக்கான விரிவான பயிற்சி வகுப்பை ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சிறந்த நிறுவன கட்டமைப்பின் கீழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் தொடர்பாடலில் ஆர்வமுள்ளவர்களை இலக்காகக் கொண்ட விசேட பயிற்சிப் பட்டறைகள் தொடரவும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM