வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்குள் நேற்று (28) இரவு சென்ற திருடர்கள் அங்கிருந்த மூன்று உண்டியல்களை திருடி வெளியே கொண்டுச் சென்று அதிலிருந்த பெருமளவான பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ஆலயத்திற்கு பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த நகசிங்கர் ஆலயத்தில் பல தடவைகள் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.