பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும் ஆண்கள் அதற்கு துணை நிற்பதும் வரவேற்கத்தக்கது - கண்டி உதவி இந்தியத் தூதுவர்

20 Jan, 2025 | 03:47 PM
image

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும், அதற்கு ஆண்கள் துணை நிற்பதும் வரவேற்கத் தக்க பண்புகளாகும் என கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தெரிவித்தார். 

கண்டி சஹஸ் உயன பூங்காவில் நடைபெற்ற பொங்கல் தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டாடும் அதே விதமாக இங்கு கொண்டாடப்பட்டமை எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும், மகளிர் குழு ஒன்று ஒழுங்கு செய்தமை எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியான பொதுப் பணிகளில் மகளிர் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஊக்குவித்தல் வேண்டும். ஆனால், இங்கு நடந்த வைபவத்தை நோக்கும்போது மேற்படி பெண்களது தொழிற்பாட்டுக்கு ஆண்கள் துணையாக நின்றிருப்பர் என என்னால் உணர முடிந்தது. இது இன்னும் வரவேற்கத்தக்க விடயமாகும். 

அந்த வகையில் இதனை ஒழுங்கு செய்த கண்டி இந்து மகளிர் அமைப்பு மற்றும் அதற்கு துணையாக நின்ற பொது அமைப்புக்கள், இவர்களுக்கு ஊக்கம் வழங்கிய ஆண்கள் எனப் பலரையும் பாராட்டுகிறேன் என்றார்.

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் தலைவி ஆர். கலையரசி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் விசேட அதிதிகளாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா அபேசிங்க, கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரேசா பெர்னாண்டோ உட்பட கண்டி நகர வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்தகொண்டனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31