முன்னாள் அமைச்சர் மனுஷ சி.ஐ.டி.யில் நாளை ஆஜராகுவாரென நீதிமன்றுக்கு அறிவிப்பு !

20 Jan, 2025 | 02:53 PM
image

தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (21) ஆஜராகவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று திங்கட்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தன்னை முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த அறிவித்தலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இந்த மனு தொடர்பான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கு அழைக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு தொடர்பான  ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு மீண்டும் அழைத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 18:34:14