திங்களன்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பும்போது அமெரிக்கா எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் தீர்வை காண்பதற்காக வரலாற்றுரீதியான வேகத்துடனும்,வலிமையுடனும் செயற்படுவதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
வோசிங்டனில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிபேரணியில் உரையாற்றியவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெற்றிபெற்றுபெற்றுள்ளோம் என தெரிவித்துள்ள டிரம்ப் முன்னர் இருந்ததை அமெரிக்காவை மிகச்சிறப்பாக மாற்றப்போகின்றோம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் வழமை போன்று தற்பெருமை,பொய்யான கூற்றுக்கள் சாத்தியமற்ற வாக்குறுதிகள் அடங்கிய உரையை நிகழ்த்தினார்.
இது அவரது பதவியேற்பு நிகழ்விற்கு களம் அமைப்பதை போல காணப்பட்டது.
நாளை முதல் நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வை காண்பதற்கு நான் வரலாற்று வேகத்துடன் உறுதிப்பாட்டுடன் செயற்படுவேன் என டிரம்ப் தெரிவித்தார்.
நான் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதும் ஒரு மணிநேரத்தில் ஜோபைடனின் ஒவ்வொரு தீவிரமான முட்டாள்தனமான உத்தரவுகளையும் மாற்றி அமைப்பேன்,நீங்கள் தொலைக்காட்சிகளில் பல மகிழ்ச்சியான விடயங்களை பார்க்கப்போகின்றீர்கள் ஒரே நாளில் பல உத்தரவுகளில் கைச்சாத்திடவேண்டாம் என யாரோ சொன்னார்கள் இல்லை நாளையே பல உத்தரவுகளில் கைச்சாத்திடப்போகின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரச்சார காலத்தில் தெரிவித்து வந்ததை போல குடியேற்றவாசிகள் விவகாரத்தை நேற்றைய உரையில் முன்னிலைப்படுத்தியுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் எல்லை வன்முறை கும்பலின் பிடியில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உரிய ஆவணங்கள் அற்றவர்கள் குற்றங்கள் இழைப்பதை காண்பிப்பதாக தெரிவிக்கும் வீடியோ ஒன்றையும் அவர் காண்பித்தார்.
நாளை சூரியன் அஸ்தமிக்கும்போது எங்கள் தேசத்தின் மீதான படையெடுப்பு முடிவிற்கு வந்திருக்கும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் நாளை நான் எனது உரையில் குறிப்பிடவுள்ள எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவையாக காணப்படும்,என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM