அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
தலைநகர் வொஷிங்டன் டி.சி.யில் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ட்ரம்பின் பதவிப் பிரமாண வைபவம் நடைபெறவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ், டொனால்ட் ட்ரம்ப்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
யூ.எஸ். கெபிட்டல் எனும் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் வெளிப்புறத்தில் திறந்தவெளி நிகழ்வாக அமெரிக்க ஜனாதிபதிகளின் பதவியேற்பு வைபவம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இம்முறை ஆபத்தான அளவு குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பதவிப்பிரமாண வைபவம் யூ.எஸ். கெப்பிட்டல் கட்டடத்தின் மத்திய வட்டவடிவ மண்டபத்துக்குள் நடைபெறும் உன ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 40 வருடங்களில் முதல் தடவையாக அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இறுதியாக 1985 ஜனவரி 20 ஆம் திகதி ரொனால்ட் றீகன் இரண்டாவது தடவையாக பதவியேற்றபோது அந்த நிகழ்வு யூ. எஸ். கெப்பிட்டல் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதிகளின் பதவியேற்பின் போது சுவாரஸ்யமான வரலாறுகளும் பதிவாகியுள்ளன. அவற்றில் சில
1.
1981 ஆம் ஆண்டு ரொனால்ட் றீகனின் முதலாவது பதவியேற்பு நிகழ்வு கெப்பிட்டலின் வெஸ்ட் டெரசில் இடம்பெற்றது.
2
1985 ஆம் ஆண்டு கடும் குளிர்காரணமாக ரொனால்ட் றீகனின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு கெப்பிட்டல் ரொண்டுடாவின் உள்ளக அரங்கிற்கு மாற்றப்பட்டது. உலகில் முதல்தடவையாக இது இடம்பெற்றது. உலகில் மிகவும் குளிரான நாளில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வு என பதிவாகியுள்ளது.
3.
2001 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் தனது மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பதவியேற்பதை பார்வையிட்டார். அமெரிக்க வரலாற்றில் மகன் பதவியேற்கும் நிகழ்வில் தந்தை பிரசன்னமாகியிருந்தது இதுவே முதல்தடவையாகும்.
4.
2009 இல் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வில் 1.8 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பு நிகழ்வில் அதிகளவானவர்கள் கலந்துகொண்டமை இந்த தடவையே ஆகும்.
5
2021 ஆம் ஆண்டில் ஜோபைடனின் பதவியேற்பு நிகழ்வை அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த டொனால்ட் டிரம்ப் புறக்கணித்தார் - இதுவும் அமெரிக்க வரலாற்றில் முதல்தடவையாகும்.
6
2021 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதிகள் பதவியேற்பு வரலாற்றில் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவியேற்றார்.
தொகுப்பு : வீரகேசரி இணையம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM