கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை பெந்தோட்டை - அலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த காரின் சாரதி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்கள் பெலியத்த மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 37 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.