இந்­துக்­க­ளி­டையே பிர­சித்தி பெற்ற சப­ரி­மலை ஐயப்பன் கோயிலில் மக­ர­வி­ளக்கு பூஜையும், பொன்­னம்­பல மேட்டில் மகர ஜோதி தரி­ச­னமும் இன்று நடை­பெ­று­கி­றது. மக­ர­வி­ளக்கு பூஜையில் பங்­கேற்­ப­தற்­காக சப­ரி­ம­லையில் பக்­தர்கள் குவிந்­துள்­ளனர். மலைப் பகு­தி­களில் அவர்கள் கூடாரம் அடித்து தங்கி உள்­ளனர். மக­ர­வி­ளக்கு பூஜை இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இதனால் சப­ரி­ம­லையில் பக்­தர்கள் கூட்டம் வெள்­ள­மாக காட்­சி­ய­ளிக்­கி­றது.

சப­ரி­மலை ஐயப்பன் கோயிலில் மண்­டல பூஜையை முன்­னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி மாலை நடை திறக்­கப்­பட்­டது. தினமும் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்கள் சப­ரி­ம­லைக்கு வந்து சாமி­த­ரி­சனம் செய்­தனர். பின்னர் டிசம்பர் 27ஆம் திகதி மண்­டல பூஜை நடந்­தது. அன்று இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்­கப்­பட்­டது. பின்னர் மக­ர­வி­ளக்கு பூஜைக்­காக கடந்த டிசம்பர் 30ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்­கப்­பட்­டது.

மக­ர­வி­ளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்­ப­னுக்கு அணி­விப்­ப­தற்­கான தங்க திரு­வா­ப­ர­ணங்கள் அடங்­கிய பெட்­டிகள் பந்­தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புதன்­கி­ழமை பகல் 1 மணிக்கு சப­ரி­மலை நோக்கி சரண கோஷம் முழங்க ராஜ­பி­ர­தி­நிதி தலை­மையில் பலத்த பாது­காப்­புடன் ஊர்­வ­ல­மாக புறப்­பட்­டது.

அதி­காலை 1 மணிக்கு நடை திறக்­கப்­படும். தொடர்ந்து திரு­வி­தாங்கூர் ராஜ வம்­சத்தின் தலை­ந­க­ரான திரு­வ­னந்­த­புரம் கொட்­டா­ரத்தில் இருந்து கொண்டு வரப்­படும் சிறப்பு நெய் மூலம் நெய் அபி­ஷேகம் நடை­பெறும். தொடர்ந்து 1.27 மணிக்கு மகர சங்­ரம பூஜை நடத்­தப்­பட்டு அதி­காலை 2 மணிக்கு நடை அடைக்­கப்­படும். தொடர்ந்து வழக்­கம்போல் 3 மணிக்கு நடை திறக்­கப்­பட்டு பூஜைகள் நடை­பெறும்.