இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றது என பார்ப்பதற்காக தங்கள் பகுதிகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
15மாதங்கள் பாலைவனத்தில் அலைந்த பின்னர் குடிப்பதற்கு நீர் கிடைத்தது போல உணர்கின்றேன் என காசாநகரத்தை சேர்ந்த இடம்பெயர்ந்த பெண் அயா தெரிவித்துள்ளார்.
காசாவின் மத்திய பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில் கடந்த ஒருவருடகாலமாக தஞ்சமமைந்திருந்த அவர் தனது உணர்வுகளை வட்ஸ்அப்மூலம் ரொய்ட்டருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இஸ்ரேலின் கடும் தாக்குதல்களும் ஹமாஸ் அமைப்பினருடனான மோதல்களும் இடம்பெற்ற காசாவின் வடக்கில் முற்றாக அழிக்கப்பட்டு சிதைவுகள் இரும்புதுண்டங்களுடன் காணப்படும் பகுதி ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளிற்கு வந்தனர்.
தென்பகுதி நகரான கான் யூனிசில் மக்களின் கரகோசங்களிற்கு மத்தியில் ஹமாஸ் உறுப்பினர்கள் வாகனங்களில் வீதிகளில் வலம்வருகின்றனர்.
இஸ்ரேலின் விமானதாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக பல மாதங்களாக மறைந்திருந்த ஹமாசின் பொலிஸ்பிரிவினர் நீலநிற சீருடையில் காணப்படுகின்றனர்.
ஹமாஸ் உறுப்பினர்களிற்கு வாழ்த்துவதற்காக கூடியிருந்த மக்கள்அதன் ஆயுதபிரிவான அல்அசாம் பிரிகேட்டிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலிய பிரதமரின் நடவடிக்கைகளிற்கு மத்தியிலும் போராடும் அனைத்து தரப்பினரும் தாக்குப்பிடித்து நிற்கின்றனர் என போராளியொருவர் தெரிவித்தார்.
இது யுத்த நிறுத்தம் ஆண்டவன் விரும்பினால் முழுமையானதாக நீடிக்கும்,என அவர் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM