(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கும் முகாமைத்துவ குழு, செயற்குழு மற்றும் நிறைவேற்று சபை கூட்டங்களை முறைப்படி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானங்களுக்கமைய புதன்கிழமைகளில் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தையும், மாதம் ஒருமுறை செயற்குழு கூட்டத்தைம், மூன்றாவது வாரம் வியாழக்கிழமை செயற்குழு கூட்டத்தையும், மாதம் ஒருமுறையும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழுவின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் கவனம் செலுத்தி, கட்சியை சிறந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் நோக்கில் கட்சியின் உள்ளக ஜனநாயகத்தை மேலும் உறுதிப்படுத்தி இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM