பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள் திறப்பு - மக்களே அவதானம்! 

19 Jan, 2025 | 04:24 PM
image

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதன் 4 வான்கவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான்கதவுகள் 6 அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான்கதவுகள் ஊடாக நீர் பாயும் வீதத்தை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அத்துடன், நெளுக்குளம் - நேரியகுளம் வீதியூடாக பயணிப்பவர்களும் அவதானமாக போக்குவரத்தை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09