எம்.நியூட்டன்
இனவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கான எமது பொறுப்புக்களை முன்னெடுப்பதை நாம் உறுதியாக மேற்கொள்வோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை (18) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தவர் அங்கு மேலும் கூறுகையில்,
இங்கு நிகழ்ந்த தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டபோது எமது அரசாங்கம் தேசிய தைப்பொங்கல் நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கு எடுத்த தீர்மானம் எவ்வளவு சரியானது என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
துர்க்கை அம்மன் புனித பூமியில் நின்று புதிய ஆரம்பமாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் தினத்தில் ஆசி பெற்றுக்கொண்டமையும், சூரியனுக்கும் எருதுக்கும் நன்றி கூறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையும் எமது பாக்கியமாகும்.
ஒட்டுமொத்தமான இலங்கைக்குமே புதிய எதிர்பார்ப்பு தான் உள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி, ஜனாதிபதி தேர்தலிலும் சரி நீங்கள் எமக்கு எதிர்பார்ப்புடன் வழங்கிய ஆணையை நாங்கள் மறக்கவில்லை.
நீங்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு நாம் மதிப்பளிக்கும் முகமாக தேசிய தைப்பொங்கல் தினத்தினை இந்தப் பூமியில் கொண்டாடுவது மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
அதுமட்டுமன்றி, இலங்கையர்களாக ஒன்றிணைவதற்கும் தேசிய தைப்பொங்கல் வழியமைப்பதாக உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM