ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினை; தொடர்ச்சியான போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்!

19 Jan, 2025 | 01:25 PM
image

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தினையும், யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்திணையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று சனிக்கிழமை (18) யாழ்ப்பாணம் - மாம்பழம் சந்தியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மாகாணத்தில் ஆண்டுதோறும் இடமாற்றம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெற்றாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களிலே பணிசெய்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் ஐந்து வெளிமாவட்ட சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். 

இருப்பினும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள், வெளிமாவட்ட சேவையை 8 அல்லது 10 வருடங்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் உள நெருக்கடிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

இடமாற்ற சபையிலே தீர்மானம் எடுக்கப்படுகின்றபோது தேசிய இடமாற்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப இந்த இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களிலும் ஒரு அரசியல் சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இப்போது இருக்கின்ற அரசாங்கம் தங்களுக்கு சார்பானவர்களை பெரிய பெரிய பதவிகளில் அமர்த்துவதுடன், அரசியல் சார்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

இடமாற்றத்திலேயே அரசியல் சார்பான தொழிற்சங்கங்கள் செயற்பட்டுக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தில் அண்ணளவாக 17 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இவற்றில் 80 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்கள். அவர்கள் மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வவுனியா வடக்கு - தெற்கு போன்ற அதி கஷ்ட பிரதேசங்களில் மிகவும் இன்னல்களை சந்திக்கின்றனர்.

இவர்கள் ஒரு தசாப்தத்துக்கு மேலாக வெளிமாவட்டத்தில் வேலை செய்கின்றபோதும் வாழ்வியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 

அதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒன்று தற்போது நாட்டில் சனத்தொகை பற்றாக்குறை. இந்த விடயத்தில் இடமாற்ற பிரச்சினையும் செல்வாக்கு செலுத்துகின்றது.

தற்போது இருக்கின்ற அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனத்தை வழங்குவதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

கடந்த 2021ஆம் ஆண்டு வரலாற்றில் பேசப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து ஒரு சுகயீன விடுமுறை போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தின் முன்னால் முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாண நகரில் ஒரு வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும்...

2025-11-12 17:03:04
news-image

புதிய அரசியலமைப்பை புறக்கணித்த அரசாங்கத்தை கடுமையாக...

2025-11-12 15:22:17
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார...

2025-11-12 18:05:04
news-image

நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக...

2025-11-12 16:06:52
news-image

அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும்...

2025-11-12 15:23:19
news-image

2028க்கு பிறகு கடனை திருப்பி செலுத்துவதற்கு...

2025-11-12 17:00:17
news-image

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில்...

2025-11-12 16:24:36
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபா கொடுப்பனவு...

2025-11-12 16:07:48
news-image

அரசாங்கம் போதைப்பொருளை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைக்கு...

2025-11-12 17:51:43
news-image

மாகாண சபை தேர்தலுக்கு நிதி ஒதுக்கியதாக...

2025-11-12 17:02:07
news-image

வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபை பகுதிகளில்...

2025-11-12 16:14:15
news-image

மலையக மக்களின் அபிவிருத்தியை சம்பளத்துக்கு மாத்திரம்...

2025-11-12 17:01:37