உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்த தருணத்தில் ஜனாதிபதி மாளிகை மீது பறந்த ரஸ்யாவின் ஆளில்லா விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஸ்டார்மெர் உக்ரைனிற்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அவர் உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தவேளை ஆளில்லா விமானதாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலிகள் கேட்டன அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையின் பின்புறத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளின் சத்தம் கேட்டது.
உக்ரைன் வான்பரப்பில் வான்பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் கேட்பது வழமையான விடயம் என்ற போதிலும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இந்த சத்தம் கேட்பது இதுவே முதல்தடவை.
ஒரு ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.இரண்டு ஆளில்லா விமானங்கள் வான்பரப்பில் காணப்பட்டன என தெரிவித்துள்ள நபர் ஒருவர் அவை தாக்குதல் ஆளில்லா விமானங்கள் இல்லை கண்காணிப்பு ஆளில்லா விமானங்களாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வேடிக்கையாக கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி ரஸ்யாவின் ஆளி;ல்லா விமானங்கள் தென்பட்டால் நாங்கள் அவற்றிற்கு ஹலோ சொல்லுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆளில்லா விமான அச்சுறுத்தல் உக்ரைன் நாளாந்தம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM