இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 13 பிர தேச செயலகங்களிலும் மண்சரிவு, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மண் சரிவு அனர்த்தத்தால் நிவித்திகலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மண்ணில் புதையுண்ட 12 பேரின் சட லங்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் இவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இது வரை 47பேர் மண்சரிவினாலும், வெள்ளத்தாலும் உயிரிழந்துள்ளனர். 328 குடும்பங்களைச் சேர்ந்த 1168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 குடும்பங் கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி வௌ்ளவல மரத்தோட்டம் பிரதேசத்தில் மண் சரிவு அபாயத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இரத்தினபுரி நகரில் ஏற்பட்ட வௌ்ளத்தால் இரத்தினபுரி சிவன் கோவில், முத்தவ பௌத்த விகாரை, அமன பாலிகா மகா வித்தியாலயம் என்பவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி வௌ்ளம் பரவியுள்ள பகுதிகளில் ஓடங்கள் மூலம் மக்களை ஏற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்துக்கும் உதவி வருகின்றனர்.
காவத்தை பொற்றுவ 100 ஏக்கர் பிரிவில் 40 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இறக்குவானை காவத்தை. தேவ பெல்மதுள்ள பகுதிகளில் வௌ்ளம் வழித்தோடியுள்ள போதும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்ப வில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM