இந்­தியா – ஆஸி. அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று

By Raam

15 Jan, 2016 | 08:25 AM
image

இந்­தியா – ஆஸி. அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று நடக்­கி­றது.

பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்­டியில் இந்­திய அணி 309 ஓட்­டங்கள் குவித்தும் தோல்­வியை தழுவி­யது. இதற்கு இன்று பதி­லடி கொடுக்­குமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

துடுப்­பாட்­டத்தில் அசத்­திய இந்­திய அணி, பந்­து­ வீச்சில் கோட்­டை­விட்­டது.

இதனால் பந்­து­வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்­டாயம் உள்­ளது.சுழற்­பந்து வீரர்­க­ளான அஷ்வின், ஜடேஜா தாக்­கத் தை ஏற்­ப­டுத்தவில்லை. இவர்­களின் நேர்த்­தி­யான பந்­து­வீச்சை பொறுத்தே அணியின் நிலை இருக்­கி­றது.

சொந்த மண்ணில் அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்­து­வது சவா­லா­னது. இந்­திய வீரர்கள் கடு­மை­யாக போராட வேண்டும்.

இந்த ஆட்­டத்­திலும் வென்று அவுஸ்­தி­ரே­லிய அணி தொடர்ந்து முன்­னிலை வகிக்கும் ஆர்­வத்­துடன் இருக்­கி­றது.

இது­வரை நடந்த 119 ஒருநாள் போட்­டி­களில் இந்­தியா 40 போட்­டி­க­ளிலும், ஆஸி. 69 போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் முடிவில்லாமல் நிறைவுக்கு வந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right