(நெவில் அன்தனி)
மலேசியாவில் இன்று சனிக்கிழமை (18) ஆரம்பமான 2ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சுப்பர் சிக்ஸுக்கு இலக்கு வைத்து ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை, தனது ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான மலேசியாவை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை எதிர்த்தாடவுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு இளையோர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக விளையாடிவந்த வீராங்கனைகள் நடப்பு 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியைக் குறிவைத்து விளையாடவுள்ளனர்.
தென் ஆபிரிக்காவில் 2023ஆம் நடைபெற்ற அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த போதிலும் ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தது.
ஆனால், சுப்பர் சிக்ஸுடன் இலங்கை வெளியேறியிருந்தது.
அப்போதைய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணியில் விளையாடிய மனுதி நாணயக்கார, ரஷ்மிக்கா செவ்வந்தி, ரஷ்மி நேத்ராஞ்சலி, சுமுது நிசன்சலா ஆகிய நால்வர் இந்த வருட அணியிலும் இடம்பெறுகின்றனர்.
அவர்களில் மனுதி நாணயக்கார தலைவியாகவும் ரஷ்மிக்கா செவ்வந்தி உதவித் தலைவியாகவும் இந்த வருட இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்றனர்.
இம்முறை இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், மலேசியா ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
இந்த மூன்று அணிகளுடனான போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றால் இலங்கைக்கு சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு மலேசியாவுடனான நாளைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கை கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளை 21ஆம் திகதியும் இந்தியாவை 23ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக பங்களாதேஷுக்கு எதிராக இங்கு நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 தொடரை 2 - 2 என இலங்கை சமப்படுத்திக்கொண்டிரு;ந்தது.
இதனைத் தொடர்ந்து மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னொடியாக நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகள் இலங்கைக்கு சிறப்பாக அமையவில்லை.
பங்களாதேஷுடனான போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் சமோஆவிடம் கடும் சிரமத்திற்கு மத்தியில் பந்துவீச்சாளர்களின் திறமையால் வெற்றிபெற்றது.
எவ்வாறாயினும், 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியில் மனுதி நாணயக்கார, சமுது நிசன்சலா, தஹாமி சனுத்மா, சஞ்சனா காவிந்தி ஆகியோர் துடுப்பாட்டத்திலும் லிமன்சா திலக்கரட்ன, சமோதி ப்ரபோதா, சஷினி கிம்ஹானி, அஷேனி தலகுனே ஆகியோர் பந்துவீச்சிலும் முழுத் திறமையை வெளிப்படுத்தி இலங்கையை வெற்றி அடையச் செய்வார்கள் என நம்பப்படுகிறது.
இலங்கை குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி, ரஷ்மிக்கா செவ்வந்தி (உப தலைவி), விமோக்ஷா பாலசூரிய, ஹிருணி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, சஞ்சனா காவிந்தி, ஷெஹாரா இந்துவரி, தஹாமி சனுத்மா, அஷேனி தலகுனே, ப்ரமுதி மெத்சரா, சமோதி ப்ரபோதா, தனுலி தென்னக்கூன், லிமன்சா திலக்கரட்ன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM