(நா.தனுஜா)
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும் பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காலநீடிப்பு செய்யப்பட்ட 57/1 தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை எவ்வகையிலேனும் தொடரவேண்டியது அவசியம் என சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்ற வேளையிலேயே இலங்கையில் ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அதனையடுத்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பிலான தீர்மானம் வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்குக் காலநீடிப்பு செய்யப்பட்டது. மேற்குறிப்பிட்டவாறு ஓராண்டுக்கு காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருடன் முடிவுக்கு வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட அணுகுமுறை எவ்வாறிருக்கப்போகிறது என நன்கறியப்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அம்பிகா சற்குணநாதனிடம் வினவியபோது, உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் முக்கிய கவனம் பெற்றிருப்பதனால், எதிர்வரும் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்படுமா? அல்லது புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படுமா? என்பது பற்றி உத்தரவாதமாகக் கூறமுடியாது எனத் தெரிவித்தார்.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும்பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM