(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம், ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக அவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தினை பொய்யென வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமாரவின் நான்கு நாள் சீன விஜயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நாட்டு மக்களுக்கு பல உண்மைகளை உணர்த்தியுள்ளது.
சீனா தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்து பொய் என்பது திட்டவட்டமாக வெளிப்பட்டுள்ளது.
ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால் இன்று பொருளாதார மீட்சிக்கு சீனாவை தஞ்சமடைந்துள்ளார்கள். தேசிய மக்கள் விடுதலை முன்னணி பொய்யை மாத்திரம் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM