ஒருவருடகாலத்துக்கு நீடியுங்கள் ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிக அலுவலக அதிகாரிகளிடம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

18 Jan, 2025 | 10:05 PM
image

(நா.தனுஜா)

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான உலகளாவிய மாநாடு கடந்த 15 - 16 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது.   

இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளரும், கிளிநொச்சி மாவட்டத் தலைவியுமான லீலாதேவி ஆனந்த நடராஜா, முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி, கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 மாணவர்களில் ஒருவரின் தாயான ஜெனிஃபர் மற்றும் 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர், மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களுடன் தொடர்புபட்ட விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடல்களில் பங்கேற்று, தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதேவேளை இலங்கையிலிருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினர், இம்மாநாட்டுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் அதிகாரிகள் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.

இச்சந்திப்புக்களின்போது தற்போது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பினர், இருப்பினும் அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இலங்கையைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளையும், வேண்டுகோள்களையும் செவிமடுத்த ஐ.நா அதிகாரிகள், அவை தொடர்பில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதற்கு ஜே.வி.பி பொறுப்புக்...

2025-02-12 11:01:10
news-image

கடுவலையில் பாடசாலை மாணவ, மாணவிகள் மீது...

2025-02-12 11:00:32