விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
'நாட்டிய கலா மந்திர்' நடனப்பள்ளியின் இயக்குநர் “கலாசூரி” ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் சதாசிவம் - கவிதா தம்பதியின் மகளுமான விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றமானது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
“பொன்னியின் செல்வன் - 2” திரைப்படத்தில் மாதுளி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான இந்திய நடிகையும் பெங்களூர் “சித்கலா” நாட்டியப்பள்ளியின் நிறுவுனருமான குமாரி ஸ்ரீமா உபாத்யாயா இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் பரதநாட்டியக் கலைஞரும் நடன இயக்குநருமான மதுரை ஆர். முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும் பிரபல தொழிலதிபர் ஏ.பி. ஜெயராஜா கெளரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
'நாட்டிய கலா மந்திர்' கலா நிலையத்தில் பயின்று அரங்கேற்றம் நிகழ்த்தும் 150ஆவது மாணவி என்ற பெருமைக்குரியவர் விகாஷ்னி சதாசிவம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM