எம்மில் பலரும் உயர் வருவாய் பிரிவினராக இருப்பினும் நடுத்தர வருவாய் பிரிவினராக இருப்பினும் அல்லது குறைந்த வருவாய் கொண்ட பிரிவினராக இருப்பினும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பொருளாதார நிலையை பொறுத்து கடன் இருக்கும்.
சிலருக்கு ஆயிரக்கணக்கில் சிலருக்கு லட்சக்கணக்கில் சிலருக்கு கோடிக்கணக்கில் என கடன் சுமை நாள்தோறும் அதிகரித்து வரும் . இதனால் கடன் வாங்கியவர்களும், கடன் கொடுத்தவர்களும் வெவ்வேறு வகையினதான அழுத்தங்களை எதிர்கொண்டு இருப்பார்கள். இதனை சீரமைப்பதற்காகவும் கடன் சுமையை குறைப்பதற்காகவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
மாதந்தோறும் தவறாமல் வரும் அமாவாசை தினத்திற்கு மறு நாளான பிரதமை திதியன்று மாலை வேளையில் உங்களுடைய இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு, உங்களது பூஜை அறையில் தியான நிலையில் அமர்ந்து உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நினைத்து கடன் சுமை குறைய வேண்டும் என்ற வேண்டுதலை சமர்ப்பணம் செய்யுங்கள்.
உங்களுடைய பிரார்த்தனை ஒருமுகமானதாகவும் , தியானம் ஆழ்ந்த நிலையிலும் இருக்க வேண்டும் . பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் பிரார்த்தனையை சமர்ப்பித்து விட்டு அதன் பிறகு எழுந்து சென்று உங்களுடைய இரண்டு கைகளில் இருக்கும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். பிறகு அந்த தண்ணீரை உங்களது வீட்டு வாசலிலோ அல்லது குளியல் அறையிலிலோ ஊற்றி விடுங்கள்.
இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து ஐந்து அமாவாசை தினத்திற்கு அடுத்த திகதியில் வரும் பிரதமை திதியில் மேற்கொண்டால் உங்களுடைய கடன் சுமை குறையும். அதாவது கடன் சுமையை குறைப்பதற்காக புதிய வடிவிலான உப வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வழக்கமான வருவாயை விட இதுபோன்ற பிரார்த்தனைகளால் கிடைக்கும் துணை வருவாய் மூலம் கடன் சுமையிலிருந்து விடுபடலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM