ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த உத்தம ஆளுமையாளனை எமது சமூகம் இழந்து நின்கிறது என புத்தாக்க அரங்க இயக்க நிர்வாக பணிப்பாளர் எஸ்.ரி. குமரன் ஈழத் தமிழரங்கின் பிதாமகர் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கலில் மேலும் கூறுகையில்,
ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த உத்தம ஆளுமையாளனை எமது சமூகம் இழந்து நின்கின்றது. தன் வாழ்நாள் முழுமையும் அரங்கிற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர்.
தன்னை முனைப்புறுத்தாது தன் சக பயணிகளையும் இளைய தலைமுறையினரை உற்சகப்படுத்தி அவர்களது இயங்கியலில் புளகாங்கிதமடைந்த உயரிய மனிதரது இழப்பினை மனம் ஏற்க மறுக்கிறது.
சுய ஒழுக்கம் மன ஓர்மம் கொண்ட மகத்தான மனிதராக வாழ்ந்து தனது வாழ்வினை நிறைவு செய்துள்ளார். இடர் நிறைந்த வாழ்வியலுக்குள் வாழ்ந்தபோதிலும் எதற்கும் தயங்காது சமூகம் சார்ந்த படைப்புக்களை படைத்தர்.
வாழ்வியலை இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக்கிய மகத்தான கலைஞனை இழந்து தேசம் கலங்கி நிற்கின்ற வேளையில் புத்தாக்க அரங்க இயக்கம் அவருக்கான அஞ்சலியினை வலியுடன் பதிவு செய்கிறது.
ஈழத்தமிரழரங்கில் நடிகர் நெறியாளர் ஆய்வாளர் போதனாசிரியர் அரங்க உருவாக்கங்களின் முன்னோடியாவார். தனது நாடக பிரதியாக்கத்தின் மூலம் பல புதுமைகளை புகுத்தியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
நாடகத்துறை சார்ந்த வகையில் அவரது அனுபவங்கள் மிகப்பெரும் பொக்கிஷங்கள் ஆகும். சமூகத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை உள்வாங்கி தனக்குரிய நகைச்சுவைப் பாங்குடன் படைப்புக்களை படைத்தவர்.
தூர சிந்தனைகளையும் இவரால் படைக்கப்பட்ட நாடகங்கள் காலத்தை வென்று நிற்கின்ற படைப்புக்களாக விளங்குகின்றன.
சிறுவர் நாடகங்களின் மூலம் சிறுவர்களை புத்தாக்குனர்களாக உருவாக்க வேண்டும் என நாடகங்களை படைத்தவர். புத்தாக்க அரங்க இயக்கத்தின் செயற்பாடுகளை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து மகிழ்வடைந்தவர்.
நாம் அவரை சந்திக்கின்றபோது நாடக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை மகிழ்ச்சி தருவதாகும். புத்தாக்க அரங்க இயக்கம் சிறந்த முறையில் இயங்கி வருவதை அறிந்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டதுடன் தொடர்ந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு எம்மை ஆசிர்வசித்த உன்னத மனிதரை இழந்து நிற்கின்றபோது மனம் துயர்கொள்கின்றது.
புத்தாக்க அரங்க இயக்கத்தினர் ஈழத்தமிழரங்கின் பிதாமகர் என வர்ணித்து கௌரவித்திருந்தோம். இது பற்றி குறிப்பிட்டபோது தனக்குரிய புன்னகையுடன் எதிர்கொண்டவர்.
இவரது இழப்பு அரங்கத்துறையில் மிகப்பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்வதுடன் அஞ்சலியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM