விஸ்வமடு  சந்தியில்  மாலையில் வேலை முடிந்து செல்கிற பெண்களுடன் சேட்டை  மற்றும் நாக்கல்  செய்வதாக  தொடர்ந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக நேற்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற தர்மபுரம் பொலிஸ் குழுவினர் இவ்விடத்தில்  குறித்த குற்றச்சாட்டுக்கு காரணமானவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் நான்கு இளைஞர்களைக் கைது  செய்துள்ளனர்.

கைது  செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும்  இரண்டு மணிநேரம்  தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்கப்பட்டு  அறிவுரைகள்  வழங்கப்பட்டு  நிபந்தனைகளுடன்  விடுவிக்கப்பட்டுள்ளனர்  என தர்மபுரம் பொலிஸ்  வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.