தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகரான விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'WILL'(வில்) எனும் தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'WILL'(வில்) எனும் தமிழ் படத்தில் சோனியா அகர்வால் முதன்மையான வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர் விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை புட் ஸ்டெப் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கோட்டோவிய பாணியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ஒரு தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இதனிடையே தொடர் வாய்ப்பில்லாமல் நட்சத்திர அந்தஸ்த்தில் இருக்கும் விக்ராந்த் மற்றும் சோனியா அகவர்வால் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருப்பதால், சிறிய முதலீட்டு படங்களை வாங்கி வெளியிடும் விநியோகதஸ்தர்களுக்கு இந்த படம் லாபத்தை அளிக்கக்கூடும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM