தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ரூபா கொடுவாயூர் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' எமகாதகி 'எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகையான மடோனா செபாஸ்டியன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எமகாதகி' எனும் திரைப்படத்தில் ரூபா கொடுவாயூர் , நரேந்திர பிரசாத் , கீதா கைலாசம் , ராஜு ராஜப்பன் , சபாஷ் ராமசாமி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸின் ஜார்ஜ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நய்சத் மீடியா ஒர்க்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ னிவாச ராவ் ஜலகம் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் அவல நகைச்சுவையை மையப்படுத்தி இருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM