தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வருணன்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஆவோஸம் ஃபீலு ..' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வருணன் எனும் திரைப்படத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா , ராதாரவி, சரண் ராஜ், சங்கர் நாக் விஜயன் , ஹரிப்பிரியா , மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன் , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். ஸ்ரீ ராமா சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யாக்கை பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'டக்கதும்மா டக்கதும்மா ஆவோசம் ஃபீலு 'எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் போபோ சசி எழுத ,பின்னணி பாடகர், இசையமைப்பாளருமான போபா சசி பாடியிருக்கிறார்.
இந்தப் பாடலுக்கான காணொளியில் நடித்திருக்கும் நடிகை கேப்ரியல்லாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது . துள்ளலிசை பாணியில் உருவாகி இருக்கும் இந்த பாடலும், பாடலுக்கான நடனமும் இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் பிரபலமாகி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM