சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் அப்டேட்

Published By: Digital Desk 2

18 Jan, 2025 | 04:12 PM
image

'விடுதலை', 'கருடன்' படங்களின் வணிகரீதியான வெற்றியை தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாமன் படத்தின் முதல் தோற்றப் பார்வை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.  

தாய் மாமன் உறவை உணர்வுபூர்வமாக பேசும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழக நகரான திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right