முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்புக்களின் அழைப்பையேற்று குறித்தவிவசாய நிலங்களை வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டுக் குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட 1800ஏக்கர் நெற்பயிற்செய்கையில் பெருமளவான வயல் நிலங்கள் அறுவடைக்காகத் தயாராக இருந்தநிலையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வள்ளிபுனம் இடைக்கட்டுக் குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 175ஏக்கர் பெரும்போக நெற்செய்கை மற்றும், தேவிபுரம் (அ)பகுதி காளிகோவில் வெளியில் செய்கைபண்ணப்பட்ட 66ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைகளில் பெருமளவான வயல்நிலங்களும் அறுவடைக்குத் தயாரானநிலையில் வெள்ள அனர்த்தத்தால் அழிவடைந்துள்ளன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந் நிலையில் தமது பாதிப்பு நிலைதொடர்பில் இதுவரையில் உரிய தரப்பினர்கள் எவரும் வருகைதந்து பார்வையிடவில்லை என விவசாயிகளால் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டதுடன், வெள்ள அழிவிற்கான நிவாரணங்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந் நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பிலான கோரிக்கைக்கடிதங்களைத் தம்மிடம் கையளிக்குமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டதுடன், உரியதரப்பினருடன் பேசி விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM