உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் - பெப்ரல் அமைப்பு

Published By: Digital Desk 2

18 Jan, 2025 | 03:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே புதிய வேட்புமனுவைக் கோருவதற்கு 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆட்சேனபனை தெரிவிக்கப்படாவிட்டால் சட்டத்தை நிறைவேற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியேற்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெப்ரல் அமைப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பழைய வேட்புமனுக்கமைய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சிக்கல்கள்

ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். அதற்கமைய பழைய வேட்புமனுவை இரத்து செய்து, புதிய வேட்புமனுவைக் கோரி அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம் புதிதாக சுமார் நான்கரை இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தமது வாக்குகளைப் பயன்படுத்த முடியும். அதேபோன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். இதுகுறித்த சட்ட மூலம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

23ஆம் திகதி வரை இதற்கான ஆட்சேபனைக் காலமும் காணப்படுகிறது.

23ஆம் திகதி வரை இதற்கான ஆட்சேபனை தெரிவிக்கப்படாவிட்டால் இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் மீண்டும் வேட்புமனு கோரலுக்கு 17 நாட்களும், பிரசாரங்களுக்காக ஆகக் குறைந்தது 5 வாரங்கள் ஆகக் கூடியது 7 வாரங்களும் வழங்கப்படும். நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாதபட்சத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் ஏற்படாது.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படும் அதேவேளை, சகல அரசியல் கட்சிகளும் இவ்விவகாரத்தில் பொது இணக்கப்பாட்டையும் தெரிவித்துள்ளன.

எனவே ஏப்ரல் முதல் வாரத்தில்உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று நம்புகின்றோம். குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் 3 மாதங்களுக்குள் வேட்புமனு கோரப்பட வேண்டும் என சட்டத்திலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. மாறாக வேறு ஏதேனுமொரு காரணத்துக்காகவேனும் இத்தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் பெப்ரல் அமைப்பு மீண்டும் நீதிமன்றம் செல்லும்.

மேலும் மாகாணசபைத் தேர்தல் சுமார் 6 வருடங்களுக்கும் அதிகமாக காலம்  தாழ்த்தப்பட்டுள்ளது. இதனையும் உரிய காலத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28