நுவரெலியா, அம்பகமுவ பிரதேசத்தில் மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 06 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
அம்பகமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 06 பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தன்று, மாணவர்கள் அறுவரும் மேலதிக வகுப்புக்குச் சென்றிருந்த போது உணவருந்துவதற்காக அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது மாணவர்கள் அறுவரும் உணவகத்தில் நின்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த மரப் பலகை தரை திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த மாணவர்கள் அறுவரும் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM