காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

Published By: Rajeeban

18 Jan, 2025 | 02:20 PM
image

காசாவில் நாளை காலை 8.30 மணிமுதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார்.

பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும்,அதிகாரிகளின் அறிவுறுத்தல்களிற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருமாதகாலமாக கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகாத போதிலும்ஆறுவார கால  ஆரம்பகட்ட யுத்தநிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதாகவும்இஇதன்போது இஸ்ரேலிய படையினர் படிப்படியாக காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இக்காலப்பகுதியில் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ள 50வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களும் மற்றும் சிறுவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யுத்தநிறுத்தத்தின் 16 வது நாள் இரண்டாவது கட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்இதன்போது அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது  நிரந்தர யுத்த நிறுத்தம்இஸ்ரேலிய படையினரை காசாவிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்வது குறித்து ஆராயப்படும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30