நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஒருவர் காயம் ; இரண்டு மாடுகள் மாயம்

18 Jan, 2025 | 11:50 AM
image

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று சனிக்கிழமை  (18) அதிகாலை  மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட  இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தின் போது  லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில்  நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை  ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால்  அருகில் உள்ள  மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா ரதல்ல  குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான  வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான  பதாதைகள் வீதியில் இருபுறமும்  காட்சிப்படுத்தப்பட்டள்ளன. 

இருந்த போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும் அதிக  எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது .

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26